மோட்டார் வாகன இறக்குமதிக்காக விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடைகளை நீக்குவதற்கான ஒழுங்குவிதிகளை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் பின்வரும் அதிவிசேட வர்த்தமானிகள் வெளியிடப்பட்டிருந்தன.

01.

2025-01-27 திகதியிடப்பட்ட 2421/04 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் ஒழுங்குவிதி

02.

2025-01-31 திகதியிடப்பட்ட 2421/44 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் ஒழுங்குவிதி

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here