November 18, 2025
ஐ போன்களில் காணப்படும் “Siri”: இனி AI தொழில்நுட்பத்தில்..!
தொழில் நுட்பம்

ஐ போன்களில் காணப்படும் “Siri”: இனி AI தொழில்நுட்பத்தில்..!

Jun 14, 2024

AI தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்க, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நேரத்தில், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அடுத்த தயாரிப்பு வரிசையை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி நேற்று (10) நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்த டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன் தயாரிப்பில் AI அல்லது செயற்கை நுண்ணறிவு பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக, Open AI இன் பிரபலமான Chat GPT செயற்கை நுண்ணறிவு பயன்பாடு ஐபோன்களில் சேர்க்கப்படும் என்று ஆப்பிள் அறிவித்தது.

குரல் ஊடாடும் “Siri” செயலி மூலம் ஆப்பிள் ஃபோன்கள் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளுக்கு பதிலளிக்க முடியும் என்று Apple CEO Tim Cook கூறினார்.

“Siri” AI பயன்பாடு உங்களுக்காக மின்னஞ்சல்களை எழுதலாம் மற்றும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப குரல் செய்திகளை அனுப்பலாம்.

ஆப்பிள் பிரபலமான Chat GPT AI செயலியை இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐபோன்களில் கொண்டு வரும்.

ஆப்பிள் இந்த வழியில் AI தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும்போது, ​​​​ஐபோன் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஐபோன் பாவனையாளர்கள் தமது கைப்பேசிகளை AI தொழில்நுட்பத்துடன் அப்டேட் செய்ய விரும்புபவர்கள் இவ்வாறு புதிய ஐபோன் மாடல்களை வாங்குவதற்கு ஆசைப்படுவார்கள் என சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *