Wednesday, June 18, 2025

Android போன்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் Google நிறுவனம்

Must Read

கடந்த மே மாதம் நடந்து முடிந்த கூகுள் ஐ/ஓ 2024 நிகழ்வில் கூகுள் (Google) நிறுவனமானது ஆண்ட்ராய்டு போன்களுக்கான புதிய தெப்ஃட் டிடெக்ஷன் லாக் (Theft detection lock) அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த அம்சம் ஒரு ஸ்மார்ட்போன் திருடப்பட்டதைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது.

கூகுள் இந்த புதிய அம்சம் தற்போது பிரேசிலில் சோதனை செய்யப்பட உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பெயர் குறிப்பிடுவது போலவே ஆண்ட்ராய்டு போன்களுக்கான இந்த தெப்ஃட் டிடெக்ஷன் லாக் அம்சமானது, ஒரு ஸ்மார்ட்போன் திருடப்படும் போது அதை லாக் செய்யக்கூடிய ஒரு நுட்பத்தை வழங்குகிறது.

கூகுளின் இந்த புதிய ஆன்ட்டி-தெப்ஃட் அம்சம், ஸ்மார்ட்போன்களில் சேமிக்கப்பட்ட யூஸர் டேட்டாவை (User Data) பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கூகுளின் கூற்றுப்படி, ஸ்மார்ட்போன் திருட்டு போன்ற நிகழ்வுவிற்கு பின்னர் சந்தேகத்திற்குரிய செயல்பாட்டை கண்டறிந்தால், பயனர் தரவை உடனடியாக பாதுகாக்க இந்த அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கூகுளின் தெப்ஃட் டிடெக்ஷன் லாக் அம்சம் எப்படி வேலை செய்யும்? கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின்படி, இந்த அம்சம் ஆரம்ப சோதனை கட்டத்தில் மூன்று வகையான லாக்களை கொண்டிருக்கும்.

இந்த லாக்களில் ஒன்றில், திருடுடன் தொடர்புடைய பொதுவான இயக்கத்தின் சிக்னல்களை கண்டறிய உருவாக்கப்பட்ட ஏஐ திறனை, கூகுள் பயன்படுத்தும். இந்த அம்சம் சந்தேகத்திற்கு உரிய இயக்கங்களை கண்டறிந்து ஸ்க்ரீனை லாக் செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது லாக் ஆனது ஸ்மார்ட்போன் நம்பரை உள்ளிட்டு மற்றொரு டிவைஸில் இருந்து செக்யூரிட்டி சேலென்னஜை முடிப்பதன் மூலம் ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீனை தொலைவிலிருந்து லாக் செய்ய ஒரு பயனரை அனுமதிக்கிறது.

மூன்றாவது லாக் ஆனது – திருடப்பட்ட ஸ்மார்ட்போன் நீண்ட காலத்திற்கு இணைய அணுகல் இல்லாமல் இருந்தால் தானாகவே ஸ்க்ரீனை லாக் செய்யும்.

ஆண்ட்ராய்டு போன்களுக்கான வெர்ஷன் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பிரேசிலிய பயனர்களுக்கு ஜூலை மாதம் முதல் இந்த அம்சங்கள் அணுக கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படியாக இந்த 2024 ஆம் ஆண்டிற்கு உள்ளேயே இந்த அம்சம் படிப்படியாக மற்ற நாடுகளை சேர்ந்த பயனர்களுக்கு அவை வெளியிடப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது கூகுளின் இந்த தெப்ஃட் டிடெக்ஷன் லாக் அம்சம் வேளைக்கு ஆகுமா? கூகுளின் இந்த புதிய அம்சம் மேம்படுத்தப்பட்ட பேக்டரி ரீசெட் பாதுகாப்பு திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இது திருடர்களுக்கு திருடப்பட்ட டிவைஸ்களை ரீசெட் செய்வது அவற்றை மறுவிற்பனை செய்வதை கடினமாக்குகிறது. இந்த அம்சத்தின் மூலம், ஒரு டிவைஸ் திருடப்பட்டால், அது உரிமையாளரின் சான்றுகள் இல்லாமல் விற்கப்பட முடியாத சூழ்நிலையை உருவாக்கி, திருடர்களுக்கு இதை ஒரு லாபமற்ற திருட்டாக மாற்றும்.

தெப்ஃட் டிடெக்ஷன் லாக்கை போலவே கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சமும் உள்ளது. அது பிரைவேட் ஸ்பேஸ் அம்சமாகும், இது முக்கியமான ஆப்கள் மற்றும் தரவை அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

போனுக்குள் ஒரு தனியான, பாதுகாப்பான பகுதியை உருவாக்குவதன் மூலம், பயனர்கள் உடல்நலம் அல்லது நிதிதரவு போன்ற தனிப்பட்ட தகவல்களை கொண்ட ஆப்களை மறைக்கவும் லாக் செய்யவும் முடியும், இது தரவு மீறல்களுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.

 

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

மன்னாரில் அரச பேருந்தில் பாடசாலை மாணவி மீது ராணுவ சிப்பாய் பாலியல் சேட்டை!

மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து  முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு  அரச பேருந்தில் பயணித்துக்  கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது  அப்பேருந்தில் பயணித்த ராணுவ சிப்பாய் ஒருவர்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img