Thursday, July 9, 2026
No menu items!

News Line

பலஸ்தீன தாக்குதல்தாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர்

இரு பலஸ்தீன தாக்குதல்தாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டு எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் ஜெரூசலத்திற்கான நுழைவாயிலில் நேற்று (30) இடம்பெற்றுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வாகனத்தில் வந்த துப்பாக்கிதாரிகள் பஸ் நிலையத்தில் உள்ள பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக சூடு நடத்தியதாகவும் கிழக்கு ஜெரூசலத்தைச் சேர்ந்த இரு தாக்குதல்தாரிகளும் சம்பவ...

வெளியான பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு

2022 (2023) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதேவேளை, வெளியாகியுள்ள பரீட்­சை பெறு­பே­றுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அனைத்துப் பாடசாலை பரீட்சார்த்திகளின் அச்சிடப்பட்ட பெறுபேறு சான்றிதழ்கள், குறித்த அதிபர்களுக்கும் மற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் பெறுபேறு சான்றிதழ்கள் பரீட்சார்த்திகளின் முகவரிக்கும்...

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; விடுக்கப்பட்டுள்ள சூறாவளி எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் காணப்படுவதனால் நாடு முழுவதும் மழையுடனான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு மாகாணத்தின் சில...

திடீரென அதிகரித்த இலங்கை ரூபாவின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம் (30) இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (30) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 333.45 ரூபாவாகவும், கொள்வனவு விலை 323.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 247.13 ரூபாவாகவும், கொள்வனவு விலை 236.02 ரூபாவாகவும் பதிவாகியுள்ள நிலையில், யூரோ ஒன்றின் விற்பனை விலை 367.62 ரூபாவாகவும், கொள்வனவு...

வவுனியாவில் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட தம்பதியின் சடலம்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இன்று கணவனும் மனைவியும் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். செட்டிகுளம் பிரதான வீதியில் தனது மகனின் வியாபார நிலையத்திற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் வசித்து வரும் தம்பதியினரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று காலை வியாபார நிலையத்தைத் திறப்பதற்காக வருகை தந்த மகன் தனது தாயும் தந்தையும் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில்...

டுபாய் புறப்பட்டார் ஜனாதிபதி

டுபாயில் நடைபெறவுள்ள ஐ.நா. சபையின் 28 ஆவது காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் (COP28) கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டுபாய்க்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (30) காலை டுபாய்க்கு அவர் புறப்பட்டார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு (COP 28)...

மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்ட மோதல் இடைநிறுத்தம்

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிற்கு இடையிலான மோதல் இடைநிறுத்தம் மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதன் காரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களின் அடிப்படையில் யுத்தநிறுத்தம் மேலும் ஒருநாள் நீடிக்கப்படுகின்றது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. புதன்கிழமை (29) இரவு மேலும் 16 பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ள ஹமாஸ் மோதல் இடைநிறுத்த நீடிப்பை உறுதி செய்துள்ளது. இதேவேளை அமெரிக்க...

இ.போ.ச தனியார் மயமாக்கப்படும் சாத்தியம்

இந்த ஆண்டிற்குள் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) இலாபம் ஈட்டாவிடின், அதனை தனியார் மயமாக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர், இதை தவிர்க்க வேண்டுமாயின் இலங்கை போக்குவரத்து சபையை இலாபகரமான நிறுவனமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இலங்கை போக்குவரத்து...

இரண்டு இலட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (30) தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சியேற்பட்டுள்ளது. இதன் படி, இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான தங்கத்தின் விலைகளை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி, 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 190,150 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,770 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கத்தின் இன்றைய விலை பவுணொன்றிற்கு...

மன்னாரிலிருந்து கடத்த முயற்சித்த தங்கம் மீட்பு

மன்னார் கடல் பகுதியில் படகு ஒன்றில் கடத்த முயற்சித்த தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் கடல் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு சுமார் 8 கிலோ தங்கக் கட்டிகள் கடத்துவதற்கு முயற்சித்த போதே அவை மீட்கப்பட்டுள்ளதாக சுங்க கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுங்க கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு...
- Advertisement -

Latest News

போகம்பர சிறை வளாகம் சிறைச்சாலையாக அறிவிப்பு

பழைய போகம்பர சிறை வளாகம் மீண்டும் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த...