Saturday, July 11, 2026
No menu items!

Updates

சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

ஐக்கிய மக்கள் சக்தியில் இரண்டு புதிய உறுப்பினர்கள் நேற்றைய தினம் (16) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்து கட்சியில் இணைந்ததாக கூறப்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான காமினி திலகசிறி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார். அவரைத் தொடர்ந்து...

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!

நாளையதினம்(17)  இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதலாவது போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியானது நவீனமயப்படுத்தப்பட்ட தம்புள்ளையில் சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை, தம்புள்ளை விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் நேற்று(15) வியாழக்கிழமை அதிகளவான மக்கள் போட்டிக்கான டிக்கெட்டுகளை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படியில் இந்த போட்டிக்கான...

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி..!

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் சுப்பர் போல் விளையாட்டு நிகழ்ச்சிக்கு பின்னர்  , மக்கள் பேரணி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  மூவர் சந்தேகத்தின் பேரில்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்றுதிரண்டிருந்த பேரணி முடிவில் கென்சாஸ் நகரின் ரயில்...

கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்த குடும்பஸ்தர் கைது..!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டில் பல கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவர் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் குறித்த குடும்பஸ்தர், அண்மைக்காலமாக பல கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாக அவருடைய மனைவி பலமுறை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து, குறித்த சந்தேகநபர், குடும்பஸ்தர்...

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள்..!

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் கடந்த வருடத்தில், சுமார் 10 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின்  சிரேஷ்ட விரிவுரையாளர்  உதய குமார அமரசிங்க   தெரிவித்துள்ளார். மேலும் கடந்த வருடம்  சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 9,434 முறைப்பாடுகளும்  சிறுவர்கள் சித்திரவதைக்குள்ளானது தொடர்பில்  2242 முறைப்பாடுகளும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 472...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சந்திரிகா வெளியிட்ட தகவல்..!

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய குடியரசு முன்னணி நேற்றைய தினம்(15) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும்  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற ஊகங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அண்மையில்  வழங்கிய...

நிறைவேற்று அதிகாரமுறை குறித்து மகிந்த கருத்து..!

நிறைவேற்று அதிகாரமுறையை நீக்குவது சரியான நடவடிக்கை என முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன்  தான் ஏற்கனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அனுபவித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் அரசியல் நிலைமை எவ்வாறு உள்ளது என்ற ஊடகவியலாளர் எழுப்பிய  கேள்விக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச நாட்டின் அரசியல் நிலைசிறப்பானதாக உள்ளது. முழுநாடும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி...

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை..!

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தடம்புரண்டால் பெரும் பொருளாதார ஆபத்து ஏற்படலாம் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. உலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளிற்கு மத்தியில் இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருகின்றது. மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் வளர்ச்சி பாதிக்கப்பட்டமை, நம்பிக்கையின்மை முதலீட்டாளர்களின் எதிர்மறை உணர்வுகள்...

திருகோணமலையில் 10வது சாரணர் நிகழ்வு.

'மாற்றத்துக்கான தலைமைத்துவம்’என்ற தொனிப் பொருளில் இம்மாதம் 20ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை திருகோணமலையில் பத்தாவது சாரணர் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேலும் குறித்த தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது உத்தியோகபூர்வ சாரணர் இலச்சினை பிரதம சாரணர் ஆணையாளரிடமிருந்து நாட்டின் முதலாவது சாரணரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளமை...

 செல்பி மோகத்தால் உயிரிழந்த இளைஞர்..!

 செல்பி எடுக்கச் சென்ற இளைஞர் ஒருவரை சிங்கம் கடித்து கொன்ற சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச் சம்பவமானது திருப்பதி மலை அடிவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் இடம்பெற்றுள்ளது. இவ்  பூங்காவில் சிங்கங்கள் இருக்கும் பகுதியில் செல்பி எடுப்பதற்காக குறித்த இளைஞர் பாதுகாப்பு வளையத்தை தாண்டி குதித்து உள்ளே சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சிங்கம்...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...