இலங்கையின் பிரபல பாடகி மரியாசெல் குணதிலக்க தனது 68 வது வயதில் காலமாகியுள்ளார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை கலுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

“கண்டி லமிசி” என்ற பிரபல பாடலின் மூலம் இலங்கை மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்த மரியாசெல், பல தசாப்தங்களாக இசைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.

சிங்களம், ஆங்கிலம், தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பாடல்களை பாடிய அவர், இலங்கையிலும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மத்தியிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தார்.

அவரது இறுதிக்கிரியைகள் தொடர்பான விவரங்கள் குடும்பத்தினரால் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here