ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தரையில் விழுந்த மின் கம்பி காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் வெளிநாட்டவர்கள் பலர் அடங்குவதாகவும் அவர்களில் நால்வர் பிரித்தானிய நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் நிலவும் 40 டிகிரி செல்சியஸ் அளவிலான கடுமையான வெப்பநிலை காரணமாக தீ மிக வேகமாக பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here