Saturday, August 22, 2026
No menu items!

கச்சத்தீவு

கச்சத்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

யாழ்ப்பாணத்தில் இன்று (01) பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கச்சத்தீவுக்கான விஜயத்தினையும் மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி இதன்போது கச்சத்தீவில் கண்காணிப்பு விஜயத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் வடக்கு கடற்படைத் தளபதி...

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுத்த  அமைச்சர் விஜித ஹேரத்!

கச்சத்தீவை ஒருபோதும் நாம் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்கமாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார். ‘‘கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்குப் பிரதமர் மோடி தீர்வை வழங்க வேண்டும்‘‘ என நடிகரும்...

“கச்சத்தீவை ஒருபோதும் ஒப்படைக்கமாட்டோம்” – இந்திய அரசியல் முரண்பாடுகளை சுட்டிகாட்டும் விஜித ஹெராத்!

கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒப்படைக்கும் எண்ணமே இலங்கைக்கு இல்லையெனும் உறுதியான விடையை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் வழங்கியுள்ளார். இந்தியாவின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகள் இந்த விவகாரத்தில் பிரதிபலிக்கின்றன என்றும், அதனை இலங்கை அரசியல் பிரச்சினையாக பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில், “இந்த பிரச்சினையை தீர்க்க இராஜதந்திர வழிகள்...

கச்சத்தீவு தீவில் நடைபெறும் பிரம்மாண்டமான திருவிழா..!

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா இன்று (15) கச்சத்தீவு தீவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவில் 3,500க்கும் மேற்பட்ட இந்திய பக்தர்கள் கலந்து கொண்டதாக நமது நிருபர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கச்சத்தீவு தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா,...

கச்சத்தீவு தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா திகதிகள் அறிவிப்பு!

கச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா இந்த ஆண்டு மார்ச் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது. இந்த முறையும், இந்த தெய்வீக விழாவிற்கு இலங்கை கடற்படை மனிதவளம், தொழில்நுட்பம் மற்றும் வளங்களை பங்களிக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கச்சத்தீவு தீவில் நடைபெறும் இந்த...

அனுப்பி வைக்கப்பட்ட இந்திய மீனவர்கள்..!

பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் இந்தியத்துணைத் தூதரக அதிகாரிகளால் நேற்று (29.08) நண்பகல் சென்னைக்கு விமானம் மூலம்  அனுப்பி வைக்கப்பட்டனர். படகு கவிழ்ந்ததில் மாயமான இந்திய மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு நேற்று இராமேஸ்வரம் துறை முகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது கச்சத்தீவு அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் மாயமான 2 மீனவா்களில் ஒருவா்...

படகு கவிழ்ந்து விபத்து..!

இந்திய மீனவர்கள் பயணித்த படகு ஒன்று கச்சத்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் விபத்திற்குள்ளானதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதில் 4 மீனவர்கள் இருந்துள்ள நிலையில் அதில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்தது. மற்றைய இருவரும் பாதுகாப்பாக நீந்தி கச்சத்தீவில் கரை சேர்ந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை அரசை கண்டித்து   மீனவர்கள் ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க அனுமதி பெற்று தர நடவடிக்கை எடுக்க கோரியும் 5 மாவட்ட மீனவர்கள்  ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே  இன்று வெள்ளிக்கிழமை(19) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும்  மேற்பட்ட மீனவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
- Advertisement -spot_img

Latest News

சட்ட வரைவில் ஏஐ தொழிநுட்பதை பயன்படுத்த திட்டம்

சட்ட வரைவு செயல்முறையில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவது குறித்த சிறப்பு பயிலரங்கை இலங்கை நடத்தியுள்ளது. மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்கள் (VASPs) தொடர்பான சட்டத்தை...
- Advertisement -spot_img