Tuesday, June 2, 2026
No menu items!

கிளிநொச்சி

கிளிநொச்சியில் ஆசிரியர் தீயிட்டு தற்கொலை!

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள ஆசிரியர் விடுதியில், ஆசிரியர் ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது. இறந்தவரின் உடல் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் வெடிப்பு சம்பவம் – இருவர் காயம்!

கிளிநொச்சி, தட்டுவான்கொட்டி பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில், பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிகளை மேற்கொண்டு கொண்டிருந்த இருவர், தங்கள் பணியைச் செய்து கொண்டிருந்த போது நிலத்திற்குக் கீழ் புதையலாக இருந்த குண்டு வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வெடிப்பில் பலத்த காயமடைந்த இருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்...

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு – கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி, இராமநாதபுரம் பிரிவில் நேற்று (24) இரவு இடம்பெற்ற சம்பவத்தில், பொலிஸாரிடமிருந்து தப்பிக்க முயன்ற ஒருவரை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பான தகவலின் பேரில், இராமநாதபுரம் பொலிஸார் ஆலடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதே நேரத்தில், சந்தேகநபர் ஒருவரும் தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது, அவர் அருகிலிருந்த கிணற்றில் தவறி...

இயங்காமல் உள்ள கிளிநொச்சி மகளிர் சிகிச்சை நிலையம் மீண்டும் செயல்படுத்தப்படும் – சுகாதார அமைச்சர் உறுதி!

பல ஆண்டுகளாக இயங்காமல் உள்ள கிளிநொச்சி மகளிர் சிகிச்சை நிலையத்தை மீளச் செயல்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பான தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில், வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி...

சீர்கேடுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு சீல்!!!

நாச்சிக்குடா பகுதியில் சுகாதார சீர் கேட்டுடன் இயங்கிவந்த இரண்டு உணவு கடைகள் கிளிநொச்சி நிதிமன்றத்தின் கட்டளையோடு  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கிளிநொச்சி முழங்காவில் பொதுசுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட நாச்சிக்குடா பகுதியில் சீர் கேட்டுடன் இயங்கிவந்த இரு உணவகங்களுக்கும் 65,000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டதுடன் இரண்டு உணவகம் நேற்றிலிருந்து (11) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேற்பார்வைப் பொது சுகாதார பரிசோதகர் றெணால்ட்,...

வடக்கு மாகாணத்தில் விசேட மகளீர் சிகிச்சை மையத்தை செயற்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்திற்கான விசேட மகளீர் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு  நீண்ட காலமாக இயங்காமல் இருப்பதனை கண்டித்தும். அதனை விரைவாக செயற்படுத்த கோரியும்,அங்குள்ள அதி நவீன மருத்துவ உபகரணங்களை வெளியிடங்களுக்கு எடுத்துச்செல்லும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும்  இன்று (29) வைத்தியசாலை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட...

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் கோரவிபத்து; இருவர் பலி!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சி தருமபுரம் பகுதியை சேர்ந்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், கனரக டிப்பர் ஒன்றும், உந்துருளியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய நாளுக்கான வானிலை!

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...

பளை சோறன்பற்று பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம் – வீட்டின் உடமைகள் நாசம்!

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோறன்பற்று பகுதியில் நேற்று (13) இரவு வீடு ஒன்றின் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் அமைந்துள்ள பொன்னம்பலம் - சுதாகரன் என்னும் குடும்பஸ்தரின் வீட்டிற்குள் நேற்று (13) இரவு 08.30 மணியளவில் இனம் தெரியாத நபர்கள் உள்நுழைந்துள்ளனர். முகத்தை மூடி மறைத்து கத்தி,...

கிளிநொச்சியில் 68 வயது வயோதிப பெண் வெட்டிக் கொலை!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 1/2 ஏக்கர் திட்டம், ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த 68 வயது வயோதிப பெண் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். விஜயரத்தினம் சரஸ்வதி என அடையாளம் காணப்பட்ட குறித்த பெண், வீட்டில் தனிமையில் இருந்தபோது இந்தச் சம்பவம் நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸார் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை...
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் விநியோகம்;கியூஆர் முறைமையை மேலும் கடுமையாக்க திட்டம்!

எரிபொருள் அளவு நிர்ணய முறைமை (QR) எதிர்வரும் மாதங்களில் மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று தெரிவித்தார். எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தவும்,...
- Advertisement -spot_img