கிளிநொச்சி, தட்டுவான்கொட்டி பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில், பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிகளை மேற்கொண்டு கொண்டிருந்த இருவர், தங்கள் பணியைச் செய்து கொண்டிருந்த போது நிலத்திற்குக் கீழ் புதையலாக இருந்த குண்டு வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெடிப்பில் பலத்த காயமடைந்த இருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்திற்கான காரணம் மற்றும் வெடிப்புச் சாதனத்தின் தன்மை குறித்து கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்







