பஹிரவகந்தையில் உள்ள வணக்கஸ்தலத்தில் பணியாற்றி வந்த 25 வயது பௌத்த பிக்கு ஒருவர், 15 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியமை தொடர்பாக கண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சிறுமியின் தந்தையின் சகோதரரான சந்தேக நபர்,மே 20 அன்று காவலில் எடுக்கப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் தெரிவித்து, பஹிரவகந்தவைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவரையும் அதே நாளில் காவல்துறை கைது செய்துள்ளது.
குறித்த பிக்கு எதிர்வரும் ஜூன் 1 முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேசமயம் பெண் சந்தேக நபர் தலா ரூ. 200,000 மதிப்புள்ள இரண்டு பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக கண்டி காவல்துறை மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது.








