Friday, October 9, 2026
No menu items!

பலாங்கொட

தீயில் பலியான சிறுவன்..!

பலாங்கொட, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடு தீப்பிடித்ததில் பாதிப்புக்குள்ளான சிறுவனை பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இரத்தினபுரி  பிரதேசத்தில் விசித்திர வண்ணத்துப்பூச்சி !

இரத்தினபுரி - பலாங்கொட, வலேபொட பிரதேசத்தில் விசித்திர வண்ணத்துப்பூச்சி ஒன்றை அப்பிரதேச மக்கள் அவதானித்துள்ளனர். குறித்த வண்ணத்துப்பூச்சி 10 செ.மீ நீளமும் 5 செ.மீ அகலமும் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணத்துப்பூச்சி மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தினையுடையது.. இவ்வாறான விசாலமான வண்ணத்துப்பூச்சியை முதல் தடவையாக அவதானித்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. <!-- -->
- Advertisement -spot_img

Latest News

தனியார் துறையினரும் மெட்ரோ சேவையில் இணைய வாய்ப்பு; அமைச்சர் பிமல்

தனியார் துறைக்கும் மெட்ரோ பஸ் சேவையில் இணைவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ஒரு வருடத்திற்குள் அந்த வாய்ப்பு வழங்கப்படும் என...
- Advertisement -spot_img