லபுகம மற்றும் களத்துவாவவிலிருந்து மகரகமைக்கு நீர் கொண்டு செல்லும் பிரதானக் குழாயில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (24) மாலை முதல் பல பகுதிகளுக்கு 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அறிவித்துள்ளது.

குறித்த நீர் விநியோக நிறுத்தம் நாளை (24) மாலை 6.00 மணி முதல் மறுநாள் (25) மாலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த காலகட்டத்தில் கலகெதர, ஹோமகம, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, பெலன்வத்த மற்றும் மகரகம பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைபடும்.

இதனால் நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நீர் சபை வருத்தம் தெரிவித்ததோடு, சேவைகள் மீண்டும் தொடங்கும் வரை குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here