Sunday, November 8, 2026
No menu items!

பிணை

பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து வியாழேந்திரன் பிணையில் விடுதலை..!

பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தமையைத் தொடர்ந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவரை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி தனுஜா லக்மாலி பிணையில் விடுவிக்குமாறு நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தார். எனினும் பிணை நிபந்தனைகளை முறையாகப் பூர்த்தி செய்யாமையின் காரணமாக அவர் மீண்டும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டார். கையூட்டல் பெறுவதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில்...

சாமர சம்பத் எம்.பிக்கு பிணை..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று முற்படுத்தப்பட்ட போது நீதவான் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபையின் முதலமைச்சராகப் பணியாற்றிய சாமர சம்பத் தசநாயக்க, அம்மாகாணத்தில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கு பைகள் வழங்குவதற்காக ஒரு அரச வங்கியிடம் நிதி உதவி...

ஹர்ச இலுக்பிட்டியவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு..!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி ஆகியோரை பிணையில் விடுவிக்க உத்தரவு!

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அவர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (4) உத்தரவிட்டது. இருவர் மீதும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன் ஒப்படைக்கப்பட்டன. பின்னர்...

தாமரை கோபுரத்திலிருந்து குதித்தவர் கைது..!

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டின் உதவியுடன் குதித்த அமெரிக்க பிரஜை ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தாமரை கோபுர நிர்வாகத்திற்கு தெரிவிக்காததே அதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சந்தேக நபரான வெளிநாட்டவரிடம் நடத்திய விசாரணையில், தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டின் உதவியுடன் குதிக்கும் போட்டிக்காக...

தேசபந்து தென்னகோன் தலைமறைவிற்கு உதவிய நபருக்கு பிணை..!

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருக்க உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கைது செய்யப்பட்ட நபரை 10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில்...

விளக்கமறியலில் சாமர சம்பத்..!

நீதிமன்றில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு இரண்டு வழக்குகளில் பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும், மற்றுமொரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி, சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் மாதம்  முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த போது அரச வங்கியொன்றிலிருந்து நிதியை கோரிய...

வெலிகம காவல்துறையின் பதில் பொறுப்பதிகாரி பிணையில் விடுவிப்பு!

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (04) காலை சரணடைந்த வெலிகம காவல்துறையின் பதில் பொறுப்பதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் அவரை தலா ரூ.5 லட்சம் மதிப்புள்ள இரண்டு உத்தரவாதப் பத்திரங்களில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வெலிகம காவல்துறையின் பதில் பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். சந்தேக...

ஜீவனுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றின் அதிரடி உத்தரவு..!

கடந்த வருடம் மே மாதம் 30 ஆம் திகதி களனி வெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனத்தினர் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், குறித்த வழக்கு இன்று (3/3/2025)...

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் 09 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இஸ்லாத்தை அவதூறு செய்த வழக்கு தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றம் ஞானசார தேரருக்கு ஜாமீன் வழங்கியது. அந்த தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதால், தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி தேரர் சமர்ப்பித்த சீராய்வு மனு இன்று...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img