Sunday, November 8, 2026
No menu items!

யாழ்

செலவீனத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் தொடர்பாக வடமாகாணரீதியிலான தெளிவூட்டல் கலந்துரையாடல்!

2023 ஆம் ஆண்டின் 03ம் இலக்க தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் தொடர்பாக வடமாகாணரீதியிலான தெளிவூட்டல் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் சிறீ ரத்நாயக்கா தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் தேர்தல் ஆணைக்குழுவின் உயரதிகாரிகள்,மேலதிக அரசாங்கதிபர்கள் , ஐந்து மாவட்டங்களின் உதவித்தேர்தல்...

சுற்றாடல் முன்னோடி ஆலோசகர் மற்றும் ஆணையாளர்கள் நியமனம்!

கல்வி அமைச்சினால்  வெளியிடப்பட்ட 2016/27 சுற்றறிக்கைப்படி, மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பரிந்துரைக்கு அமைவாகவும் மூன்று வருடங்களுக்கு (2024- 2026)  செயற்படும் வண்ணம் யாழ் மாவட்டத்தில் சுற்றாடல் முன்னோடி மாவட்ட ஆலோசகர், சுற்றாடல் முன்னோடி வலய மற்றும் கோட்ட ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நியமனப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (07.06.24) யாழ்மாவட்ட செயலகத்தில்...

புனித ஹஜ்ஜுப்பெருநாள்; யாழில் !

புனித ஹஜ்ஜுப்பெருநாளினை இஸ்லாமிய மக்களால் கொண்டாடி வருவதுடன் தொழுகையிலும் பங்கெடுத்துள்ளனர். இவ் புனித ஹஜ்ஜுப்பெருநாளினை முன்னிட்டு யாழ் மர்யம் ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் புனித ஹஜ்ஜு ப்பெருநாளின் தொழுகை நிகழ்வு இன்று யாழ் ஒஸ்மானியா கல்லூரி மைதானத்தில் காலை 06.30 மணியளவில்  சிறப்பாக இடம்பெற்றது. இவ் புனித ஹஜ்ஜு ப்பெருநாளின் தொழுகையின் குப்தாபிரசங்கத்தினை, `புனித ஹஜ்ஜுப்பெருநாளின் மகிமை`...

யாழ். சாவகச்சேரி  A9 வீதியில் விபத்து.! ஒருவர் பலி..!

யாழ். சாவகச்சேரி  A9 வீதியில் கைதடி- நுணாவில்  பகுதியில் டிப்பருடன் மோதுண்டு இளங் குடும்பஸ்தர் ஒருவர்  சம்பவ இடத்தில்  உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(12) அதிகாலை 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர்  வாகனத்துடன் வீதியில் நடந்து பயணித்த குடும்பஸ்தர் மீது  மோதுண்டு  அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.   உயிரிழந்தவர் குருணாகலை...

பாடசாலையொன்றில் சிறுமிக்கு நேர்ந்த கதி!!!

யாழ். மானிப்பாய் பிரபல பாடசாலையில் தரம் 5க்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாடசாலையில் பிரத்தியோக வகுப்பு நடாத்திவரும் குறித்த ஆசிரியர் மாணவியுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து ஆசிரியர் கைது செய்யப்பட்டு மல்லாக நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில்...

கார் விபத்து ; ஒருவர் வைத்தியசாலையில்..!

யாழில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச்  சென்ற கார் யாழ். இலுப்பையடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்தானது நேற்று (12) இரவு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் யாழ் பலாலி வீதியூடாக புன்னாலைக்கட்டுவான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இலுப்பையடிச் சந்தியை கடக்க...

நேபாளம் பயணமாகும் இலங்கை வீராங்கனை ….!

கரவெட்டி பிரதேசத்தில் உள்ள மாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழகத்தின் வீராங்கனையும், தேசிய கபடி அணி தெரிவில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் இலங்கை கடற்படை அணி வீராங்கனையுமான பிரியவர்ணா நேபாளத்தில் நடைபெறவுள்ள கபடி போட்டியில் விளையாட்டுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறு வயது முதல் யாழ் / நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் மாலை சந்தை மைக்கல்...

யாழில் 19 வயது மாணவன் திடீரென உயிரிழப்பு…!

யாழ் - சுன்னாகத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட, மாணவன் ஒருவர் நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளார். கந்தரோடை, சுன்னாகம் பகுதியை சேர்ந்த சிறீதரன் சுஜிதரன் (வயது 19) என்ற மாணவனே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் இணுவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இவ்வாறு சிகிச்சை பெறுவதற்கு சென்ற வேளை  திடீரென...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img