அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் ஜுலியட் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் இன்று துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பம் குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அத்துடன் ரோமியோ நான்சி என்ற நபரே துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன தப்பியோடிய நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.