அமெரிக்காவில் கடந்த வாரம் முழுதும் வீசிய பனிப் புயலில் 90க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
டென்னசீ, ஒரேகன் உள்ளிட்ட மாநிலங்களிலே இவ் மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன் கடுமையான பனிப்புயல் காரணமாக குறித்த மாநிலங்களில் நெருக்கடிநிலை இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவித்து வருவதுடன் இந்த வாரமும் பனிப்புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் டென்னசீயில் குழாய்கள் உடைந்துள்ளமையால் சுமார் 400,000 குடியிருப்பாளர்கள் தண்ணீரைக் கொதிக்கவைத்துப் பயன்படுத்தும் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், சில உணவகங்களும் உணவு விடுதிகளும் போத்தல் தண்ணீரைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றுவதுடன் சில உணவகங்கள் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.