இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 25 ஆவது போட்டி இன்று (11) நடைபெறவுள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
கடந்த 05 போட்டிகளில் 1 வெற்றி , 4 தோல்வி பெற்ற சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
இதேவேளை ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இப்போட்டியிலிருந்து விலகியதால் டோனி சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு தலைவராக களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 1