கல்பிட்டி இரணைதீவுக்கு அருகில் இந்தியாவில் இருந்து கடல் வழியாக படகொன்றில் கொண்டு வரப்பட்ட போதை மாத்திரைகளுடன் இருவர் கல்பிட்டி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த படகில் இருந்து சுமார் 15 கோடி ரூபாய் பெறுமதியான 5 இலட்சத்து 70 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் , குறித்த போதை மாத்திரைகள் 10 பெட்டிகளில் பொதிகளாக வைக்கப்பட்டிருந்ததாகவும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் முடிவில் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
நுரைச்சோலை பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டடுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்பிட்டி கடற்படை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுதிறது.