July 8, 2025
இலங்கையில் விரிவுபடுத்தப்பட்டுள்ள UPI வலையமைப்பு!!!
புதிய செய்திகள்

இலங்கையில் விரிவுபடுத்தப்பட்டுள்ள UPI வலையமைப்பு!!!

May 30, 2024

இலங்கையின் தேசிய கட்டண வலையமைப்பான லங்காபே (Lanka Pay) சர்வதேச வலையமைப்பான யூனியன்பே இன்டர்நேசனல் (UPI) உடனான தனது கூட்டாண்மையை எல்லை தாண்டிய தன்னியக்க இயந்திரங்களுக்கு (ATM) விரிவுப்படுத்துகிறது.

இது தொடர்பான உடன்படிக்கையை அண்மையில் இரண்டு தரப்புகளும் மேற்கொண்டுள்ளன.

இந்த நடவடிக்கையானது இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக வசதியை வழங்கும் நோக்கில் எல்லை தாண்டிய கொடுப்பனவுகளை ஊக்குவிப்பதனை நோக்காகக் கொண்டுள்ளது.

இதன் மூலம் இலங்கை முழுவதும் உள்ள தன்னியக்க இயந்திரங்களை அணுகுவதற்கு இந்த விரிவான வலையமைப்பு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி யூனியன்பே இலங்கையில் 99 வீத தன்னியக்க இயந்திர வசதிகளை கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *