சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தடம்புரண்டால் பெரும் பொருளாதார ஆபத்து ஏற்படலாம் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

உலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளிற்கு மத்தியில் இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருகின்றது.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் வளர்ச்சி பாதிக்கப்பட்டமை, நம்பிக்கையின்மை முதலீட்டாளர்களின் எதிர்மறை உணர்வுகள் காரணமாக பெரும் பொருளாதார இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அத்துடன் இலங்கை தனது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளதுடன் பொருளாதார நடவடிக்கைகள் மீட்டெடுக்கப்படுகின்றன.

எனினும் குறுகிய காலத்திற்கு வளர்ச்சி குறைவானதாகவே காணப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here