பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று நிராகரித்துள்ளார்.
2016- ஆம் ஆண்டு கிருலப்பனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையிலும், இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில், கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 9 மாத கடூழிய சிறை தண்டனையை மேல் நீதிமன்றமும் உறுதி செய்தது.
தேரர் தனது மேன்முறையீட்டில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து விடுதலை கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது.








