புவியியலாளர்களின் ஆராய்ச்சியின்படி உலகத்தின் கடைசி முடிவிலுள்ள நகரத்தை பற்றிய முழுத்தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
பூமி உருண்டையாக இருப்பதால் இதற்கு உண்மையான முடிவு கிடையாது.
இங்கிலாந்தில் உள்ள மேற்கு சசெக்ஸ் அல்லது ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் உள்ள ஏமன் தீபகற்பம் அல்லது சிலியில் உள்ள கேப் ஹார்ன் ஆகியவை உலகின் முடிவு பகுதி என்று விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது.
இதை பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் உலகின் எல்லை என கூறுகின்றனர். தென் அமெரிக்காவின் தெற்கு முனையில்
அமைந்துள்ள அர்ஜென்டினாவில் உள்ள உஷுவாய் நகரம் தான் பூமியின் கடைசி நகரம் என்று அழைக்கப்படுகிறது.
தற்போது இது வரலாற்று அருங்காட்சியகமாக உள்ளது. இந்த இடம் ஆண்டிஸ் மலைகளுக்கு நடுவில் உள்ள இந்தப் பகுதி நெருப்பு நகரம் என்று அழைக்கப்படுகிறது.
வடக்கே மாகெல்லன் ஜலசந்தியும் தெற்கே பீகிள் கால்வாயும் இரண்டு பெருங்கடல்களையும் இணைக்கின்றன. தற்போது மக்கள் தொகை 57 ஆயிரமாகவும் பரப்பளவு 23 சதுர கி.மீ. ஆக காணப்படுகின்றது.
இங்கு வெப்பநிலை சில நேரங்களில் 12 டிகிரி செல்சியஸாகவும், சில நேரங்களில் 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். தென் துருவத்திற்கு செல்லும் அனைத்து கப்பல்களும் இங்கிருந்து புறப்படும்.
இங்கு யாகலேஸ் பழங்குடியினர் வாழ்ந்தனர். உஷுவாயின் முதல் கட்டிடமான சலுசியான் தேவாலயம் இன்றும் இந்த இடத்தில் உள்ளது.