புத்தளம், நரகலிய பகுதியில் கடலில் மிதப்பதைக் கண்டெடுத்த போத்தலில் இருந்து திரவத்தை குடித்த இரண்டு மீனவர்கள் உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர்களில் மீன்பிடி தொழிலை சேர்ந்த நான்கு பேர் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றவர் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

மீதமுள்ள இரண்டு மீனவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் அந்தப் பொருளை அடையாளம் காணவும், போத்தலில் உள்ள திரவம் என்ன என்பதையும்  கண்டறியவும் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here