மகரகமையில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அந்த வீட்டின் உரிமையாளர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
மேலும், வீட்டின் உரிமையாளரே தீ வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் முன்னதாக, 55 வயது தாயும் அவரது 16 வயது மகளும் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.






