காலையில் எழுந்ததும் தேநீர் அல்லது கோப்பி குடிக்காவிட்டால் அந்த நாளே ஓடாது சிலருக்கு. ஆனால், காலையில் தேநீர் அல்லது கோப்பி குடிப்பது ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக மூலிகை தேநீர் குடிப்பது நன்மை தரும்.
மூலிகைத் தேநீர் என்பது ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மையளிக்கும் எனக் கூறப்படுகிறது.
அதன்படி சில வகை மூலிகைத் தேநீர் குறித்து பார்ப்போம்.
மட்சா தேநீர்
நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் தேநீர் இது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படும் இந்த தேநீர் உங்கள் மனதை அமைதிப்படுத்த உதவும்.
புதினா தேநீர்
தலைவலி மற்றும் ஜீரணப் பிரச்சினைகளைச் சரி செய்யும் புதினா தேநீர், உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.
ஜின்ஸெங் தேநீர்
இந்த தேநீர் கொஞ்சம் கசப்பாக இருக்கும். ஆனால், ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மையைக் கொடுக்கும்.