சர்வதேச கிரிக்கெட் பேரவையின், ஐ.சி.சியின் Hall of Fame பட்டியலில் 7 கிரிக்கெட் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மேத்யூ ஹேடன், ஹாஷிம் ஆம்லா, கிரேம் ஸ்மித், டேனியல் விட்டோரி, மகேந்திர சிங் தோனி, சனா மிர் மற்றும் சாரா டெய்லர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் Hall of Fame பட்டியலில் 11ஆவது இந்திய வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெற்று சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தோனி “உலகம் முழுவதிலுமிருந்து வரும் கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஐ.சி.சியின் Hall of Fame இல் தனது பெயர் இடம்பெற்றிருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
இந்த கௌரவத்தை என் வாழ்நாள் முழுவதும் போற்றுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.