அனுரகுமார திஸாநாயக்க போன்றவர்கள் இலங்கையை ஆட்சி செய்ய நினைப்பது எமது துரதிஸ்டமே என சஜித்தின் இடைக்கால விசுவாசி தயாசிறி ஜயசேகர சாட்டையடித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரகூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு இவ்வாறு படு மோசமாக விமர்சித்திருந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தார்.
குறிப்பாக மத்திய வங்கி ஊழல் மோசடி தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் அப்போதைய மத்திய வங்கி ஆளுநராக இருந்த அர்ஜூன் மகேந்திரனையும் தொடர்புபடுத்தி விமர்சித்தார்.
அதாவது தான் ஜனாதிபதியானால் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்து இலங்கைக்கு கொண்டுவருவதாக கூறினார்.
இதனை சட்டரீதியாக அனுகமுடியாது என்பது தெரியாது இவ்வாறு பரப்புரை செய்து வந்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் அனுரகுமாரதிஸாநாயக்க மீது முன்வைத்து வருகின்றனர்
அந்த வகையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரகூட்டத்தில் அனுரகுமாரவை இலக்குவைத்து சரமாரியாக வார்த்தை பிரயோகங்கள் பகிரப்பட்டிருந்தன.
அந்த வகையில் தனது பங்குக்கு தயாசிரி ஜசேகரவும் சர்வதேச சட்டம் தொடர்பில் வகுப்பு எடுத்தார்.
குறிப்பாக சிங்கப்பூரின் சட்டத்தின்படி நாடு கடத்துதல் அல்லது வேறு நாட்டுக்கு ஒப்படைத்தல் என்பது சாத்தியமற்றது.
அதனை அனுரகுமார திஸாநாயக்க சரியாக தெரிந்துகொள்ளவில்லை என்பதை மையப்படுத்தி கேலிக்கையாக சிரித்து தயாசிரி ஜசேகர உரையாற்றிருந்தார்.