பொதுவாகவே சூயிங்கம் சாப்பிடுவதை தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
சூயிங்கம் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றத்துக்கு தீர்வு கிடைப்பதுடன் புத்துணர்வாக உணர முடிவதன் காரணமாக பலரும் சூயிங்கம் சாப்பிடுவதை அதிகம் விரும்புகின்றார்கள்.
சூயிங்கம் சாப்பிடும் போது உமிழ் நீர் உற்பத்தி அதிகரிப்பதன் மூலமாகவும், செரிமான அமைப்பு தூண்டப்படுகின்றது.
இது வயிற்றில் உள்ள அமிலத்தை சமநிலைப்படுத்த உதவுவதன் காரணமாக நெஞ்செரிச்சலை தடுக்க துணைப்புரிகின்றது.
சூயிங்கத்தில் பெரும்பாலும் சர்க்கரை காணப்படுவதால் அதனை அதிகமாக சாப்பிட கூடாது என்பது பொரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கின்றது எனினும் சர்க்கரை இல்லாத சூயிங்கமும் பெற்றுக்கொள்ள கூடியதாக இருப்பதால் இவற்றை சாப்பிடுவது நன்மை பயக்கும்.
சூயிங்கம் போது அதிக அளவிலான உமிழ்நீர் சுரப்பதனால் வாயில் காணப்படும் கெட்ட பாக்டீரியாக்களால் வெளியிடப்படும் ஆபத்தான அமிலங்களை சூயிங்கம் சமநிலையில் வைப்பதற்கு பெரிதும் உதவுகின்றது.
சூயிங்கம் சாப்பிடுவதால் வாயில் உள்ள உணவு துகள்களை நீக்கி வாய் சுகாதாரத்தை பேணவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
வாயில் உமிழ்நீர் உற்பத்தி அதிகமாக இருப்பது பற்கள் மற்றும் ஈறு தொடர்பான நோய்களிலிருந்து பாதுகாப்பு வழங்குகின்றது.
சர்க்கரை இல்லாத சூவிங்கம் சாப்பிடுவதால் வாயில் உள்ள உணவு துகள்கள் அல்லது பக்டீரியாக்களை அழிப்பதன் காரணமாக வாய்துர்நாற்றம் ஏற்படுவது தடுக்கப்படுவதுடன் சுவாசத்தையும் சீராகவும் புத்துணர்வுடனும் வைத்துக்கொள்ள உதவுகின்றது.
புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கு புகைப்பிடித்தல் உணர்வை குறைப்பதற்கும் சூவிங்கம் சாப்பிடுவது பெரிதும் உதவியாக இருக்கும்.
அதுமட்டுமன்றி பற்கள் மற்றும் ஈறுகளின் மீது படியும் ஒரு ஒட்டும் தன்மை கொண்ட பக்டீரியாக்களான பிளேக் எனப்படும் பக்டீரியா தாக்கத்தில் இருந்து சூவிங்கம் சாப்பிடுவது பாதுகாப்பு கொடுக்கின்றது.
இந்த பக்டீரியா தாக்கம் குறித்து கவனிக்காமல் விட்டால், பற்சிதைவு மற்றும் ஈறுகள் சம்பந்தமான ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதற்கு ஒரு சிறந்த தீர்வாக சூவிங்கம் காணப்படுகின்றது.