கொங்கோவில் இபோலா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை அந்த நாட்டில் 390-க்கும் மேற்பட்ட இபோலா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நோய்த் தொற்றின் காரணமாக, பொது சுகாதாரத்தைப் பேணுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் இன்றி,இபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இறுதிச் சடங்குகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் கலந்துகொள்வதை தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, இபோலா வைரஸ் பரவுவதைக் கருத்தில் கொண்டு,சர்வதேச சுகாதார அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here