January 13, 2026
திருமணத்தின் மூலம் கின்னஸ் சாதனை படைத்த ஜோடி!
புதிய செய்திகள்

திருமணத்தின் மூலம் கின்னஸ் சாதனை படைத்த ஜோடி!

Jun 14, 2024

பிரேசிலை சேர்ந்த பவ்லோ கேப்ரியல் டி சில்வா- கட்யூசியா லி ஹோஷினோ ஜோடி உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என பெயர் பெற்றவர்கள்.

இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.

பவ்லோவின் உயரம் 90.28 சென்டி மீட்டர் (35.54 அங்குலம்) ஆகும்.

கட்யூசியாவின் உயரம் 91.13 சென்டி மீட்டர் (35.88 அங்குலம்) ஆகும்.

இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் நட்பான இவர்கள் 2006ஆம் ஆண்டு சந்தித்துள்ளனர்.

அதன்பிறகு 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு முறை சந்தித்து பேசிய அவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என இவர்களை கின்னஸ் சாதனை அமைப்பு அங்கீகரித்துள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்ட நிலையில் பயனர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *