Tamil News Channel

திருமணத்திற்க்காக கஞ்சா விற்பனை செய்த தாயும் மகனும்..!

kanja

ஓபத்த கொட்டுகொட பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய மகனும் தாயும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டமையால் ஜா -எல பொலிஸ் நிலைய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடமிருந்து 2 கிலோ 170 கிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் கஞ்சாவை தனது தாயின் உதவியுடன் சிறிய அளவில் விற்பனை செய்து வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த இளைஞருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு 15 இலட்சம் ரூபா பணம் தேவைப்படுவதாகவும், அதனை பெற்றுக்கொள்ள தனது தந்தையிடமிருந்து 5 இலட்சம் ரூபாவை பெற்று கஞ்சாவை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts