கொழும்பின் பல பகுதிகளில் 16 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இன்றைய தினம் (13) இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இந்த நீர் விநியோகத் தடையானது இன்று மாலை 5மணி முதல் நாளை (14) முற்பகல் 9 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here