January 13, 2026
பிரித்தானியாவில் மாபெரும் கரிநாள் பேரணி
News News Line Top Updates புதிய செய்திகள்

பிரித்தானியாவில் மாபெரும் கரிநாள் பேரணி

Feb 5, 2024

இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பேரரசின் மன்னரை நோக்கிய மாபெரும் கண்டன கரிநாள் பேரணியானது நேற்றைய தினம்(04) பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பேரணி பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் ஏற்பாட்டில் பிரித்தானியா இலங்கை தூதுவரகத்திலிருந்து ஆரம்பித்து நாடளுமன்ற முன்றலில் நிறைவுற்றிருந்தது  எனவும் இலங்கை சுதந்திரமடைந்த 76ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும் ஒடுக்கு முறைக்கு எதிராகவும்,வட்டுக்கோட்டை தீர்மானத்தை வலியுறுத்தி தன்னாட்சிக்கான உரிமைக்குரல் எனும் தொனிப்பொருளில் கரிநாள் போராட்டம் பிரித்தானிய தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக இலங்கை தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு நிகராக தமிழீழ விடுதலைப் புலிகளின்  கொடியும் ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *