ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை பதுளை டன்ஹிந்த பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தில் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
41 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர்களில் இரு மாணவிகள் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பதுளை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.