December 13, 2025
முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்…
Updates புதிய செய்திகள்

முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்…

Dec 4, 2023

முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பாக நேற்று இலங்கை சுயதொழில் வல்லுநர்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் மகிந்த குமார கூறுகையில் பெற்றோலின் விலை குறைக்கப்பட்டதால் முதல் கிலோமீட்டர் முச்சக்கரவண்டிக்கு கட்டணம் ரூபாய் 90 அறவிடப்படும் என தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப அவர் ரூபாய் 100 கட்டணத்தில் பயணிகள் போக்குவரத்தை ஆரம்பித்த அனைத்து முச்சக்கர வண்டிகளும் ரூபாய் 90 இல் பயணிக்க ஆரம்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.மற்றும் 100 ரூபாயுடன் ஆரம்பிக்காத முச்சக்கரவண்டிகள் தொடர்பில் கேள்வி கேற்க பயணிகளுக்கு உரிமை உண்டு மற்றும் அவ்வாறான முச்சக்கரவண்டிகளை நிராகரிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் பெற்றோல் விலை குறைக்கப்படும் போது பயணிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு முச்சக்கரவண்டி சாரதியின் கடமையாகும் என தெரிவித்துள்ளார்.தலைவர் மேலும் முச்சக்கர வண்டி சாரதிகளிடம் கேட்டுக்கொள்வதாவது முதல் கிலோமீட்டருக்கு 90 ரூபாவும் இரண்டாவது கிலோமீட்டருக்கு 90 ரூபாவும் பயணிகளிடம் வசூலிக்குமாறு ஆகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *