
முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை
இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 2 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது.
கொழும்பு R. பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாவே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
சிம்பாவே அணி 44.4 ஓவர்களில் 208 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
துடுப்பாட்டத்தில் க்ரைக் எர்வின் அதிகபட்சமாக 82 ஓட்டங்களை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.
இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் மஹீஸ் தீக்ஷன 4 விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 49 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.
துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஜனித் லியனகே 95 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ரிச்சர்ட் ன்கராவா 5 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை வீரர் ஜனித் லியனகே தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
முதல் போட்டி மழை காரணமாக தடைப்பட்டதால் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.
இதன் காரணமாக இலங்கை அணி தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
தொடரின் அடுத்த போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.