மைக்ரோசொப்ட் நிறுவனத்தை பின்தள்ளி என்விடியா….
உலகில் மதிப்பு மிக்க நிறுவனமாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தை பின்தள்ளி என்விடியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. என்விடியாவின் பங்கு விலைகள் இதுவரை இல்லாத அளவு 136 டொலருக்கு உயர்ந்துள்ள்து. நிறுவனத்தின் மதிப்பு தற்போது 3.34 டிரில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.
அமெரிக்க நிறுவனமான என்விடியா, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்குத் தேவையான கணினிச் சில்லுகளைத் தயாரிக்கின்றது. கடந்த சில ஆண்டுகளில் அதன் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. நிறுவனத்தின் வியாபாரமும் லாபமும் உயர்ந்துள்ளன. அதன் வருவாய் இன்னும் உயரக்கூடும் என பல முதலீட்டாளர்களும் நம்புகின்றனர்.
![]()