யாழில் கசிப்பு உற்பத்தி செய்த தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார் தம்பதியினரை நேற்றைய தினம் (03) கைது செய்ததுள்ளனர்.
மேலும், அவர்களிடமிருந்து15 லீட்டர் கசிப்பினையும், கசிப்பு உற்பத்தி செய்யும் பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.