நமது முகத்தை அழகாகக் காட்டுவதற்கு லிப்ஸ்டிக் மிகவும் முக்கியமானது. அதனை போடுவதற்கும் ஒரு முறை உண்டு.
நீங்கள் விரும்பும் அழகிய உதடுகளை ஒரு சில மேக் அப் ட்ரிக் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
- சுத்தமான முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஃபவுண்டேஷனைப் பூசவும்.
- சுத்தமான ப்ரஷ்ஷைக் கொண்டு ப்ளெண்ட் செய்யவும்.
- முகத்திலுள்ள பருக்கள்,கருவளையங்களை மறைக்க முகத்தில் கன்சீலரைப் பூசவும்.
- ஐஷெடோவை கண்ணிமைகளில் பூசவும்.
- உதடின் இயற்கை நிறத்தை விட ஒரு ஷேட் அடர்த்தியான நிறத்தில் லிப் பென்சிலை பயன்படுத்தி கோடு வரையவும்.
- உதட்டின் வெளிப்புற லைனில் லிப் லைனரை பயன்படுத்தவும்.
- அடர் சிவப்பு நிற ஷேடை உதட்டில் பயன்படுத்தவும்.
- ஹை லைட்டரை உதட்டின் நடுவில் பயன்படுத்தவும்.
உதட்டை மேலும் அழகுப்படுத்த…
- உதட்டில் சிறிதளவு பவுண்டேஷனைப் போட்டு சருமத்துடன் கலக்கச் செய்ய வேண்டும்.
- உதட்டைச் சுற்றி லிப் லைனரால் கோடு வரையவும்.
- அதே லைனரால் உதட்டின் உட்புறத்திலும் கோடு வரைய வேண்டும்.
- உதட்டின் உள்ளே லிப்ஸ்டிக்கை போடவும்.
- ஒரு துணியால் அதனை துடைத்து மீண்டும் போடவும். இவ்வாறு செய்தால் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்துக்கு இருக்கும்.