வெள்ளத்தில் மூழ்கிய சர்வதேச விமான நிலையம்..!
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக (16) பெய்த கனமழை மற்றும் புயல்காற்று என்பவற்றால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வீதிகளில் நீர் தேங்கியதனால் பல இடங்களில் வாகனப் போக்குவரத்தும் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பயணிகள் அதிகம் வரக்கூடிய, டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
விமான நிலையத்திற்கு சென்ற பல விமானங்கள் வேறு பகுதிகளுக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளன.
விமான ஓடுபாதையில் வெள்ள நீர் புகுந்ததினால் விமானங்கள் மற்றும் மகிழுந்துகள், நீரில் மூழ்கியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
![]()