
ஹௌத்தியின் கிளர்ச்சி – கப்பல் பாதை மாற்றம்!
ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக செல்வதற்கு 100க்கும் மேற்பட்ட கொள்கலன் தாங்கிய கப்பல்கள் சுயஸ்கால்வாயில் செல்லாது வேறு புதிய பாதைகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் கப்பல்போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதற்கான அறிகுறி இது என கார்டியன் தெரிவித்துள்ளது.
103 கப்பல்கள் ஏற்கனவே பாதையை மாற்றியுள்ளன என குஹ்னே நஜெல் என்ற கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய பாதையின் மூலம் செல்லும் கப்பல்கள் மேலும் 6000 கடல்மைல்கள் தூரம் அதிகமாக பயணிக்கவேண்டியுள்ளது.
இதன் காரணமாக விநியோகங்கள் ஒரு மாத காலம் தாமதமாகும் நிலையேற்பட்டுள்ளது.