பூஜா ஹெக்டேவின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, சினிமா மூலம் நடிகை பூஜா ஹெக்டே சேர்த்து வைத்துள்ள மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 50 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 4 கோடி முதல் ரூ. 6 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறராம். பூஜா ஹெக்டேவிற்கு மும்பையில் 3BHK வீடு இருக்கிறது. இந்த வீட்டின் விலை ரூ. 6 கோடி என கூறப்படுகிறது.
மேலும் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் தற்போது சூர்யாவின் 44 மற்றும் தளபதி 69 ஆகிய படங்கள் உருவாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.








