தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த 25-ந்திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

1990-களின் பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள ‘டோரதி’, சாதி சார்ந்த வன்முறை மற்றும் இரு நண்பர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.இப்படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகும் 10-வது திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை பிரமித்து பாராட்டியுள்ள சேரன், ‘இதை பார்க்கும் முன்னால நீங்க நிறைய இந்த சமூகத்தை, மனிதர்களை படிக்கனும். அப்போத்தான் புரியும்.. எதுனால முதல் பகுதில அவ்வளவு வன்மம், ரத்தம், பழிக்குப்ப்பழி, சாதிச்சண்டை, மொழிபேதம்னு…. மனித அழுக்குகளால் ஆன முதல்பாதியில் இருந்து ஏன் இரண்டாவது பகுதி முழுக்க வேற படமா இருக்கு.. இயற்கையும் தீராத காதலும் சுமந்து வீசும் தென்றலாக அவ்வளவு மென்மை, பாலினம் தாண்டிய அன்பு, பயணம், வெறுப்பையும் நேசிக்கும் பக்குவம், நீ எதுவாக வேண்டுமானலும் இரு நான் அன்பு காட்டுவேன் என்ற உண்மை… காட்டுக்கூச்சலால் தலைநிமிர்ந்து நிற்பதாக ஆர்ப்பரிக்கும் ஆறாவது அறிவை பயன்படுத்தாத சமூகத்துக்குள் பாலினம் அற்ற ஒரு உயிர் புல்லாங்குழலால் இசைக்கிறது.. காற்றுக் துவாரத்துக்கும் நடுவில் இசை உருவாகும் அதிசயமே வாழ்க்கை என… திரைப்படத்தின் உருவாக்கத்தில் கார்த்திக் சுப்பராஜ்  சொல்லியுள்ளார்.

‘மனுஷனை எந்த அடையாளமும் இல்லாம நேசிக்க ஆரம்பிக்கும் உலகமே சொர்க்கம். தற்காலிக வெற்றி தோல்விகளை வைத்து மனிதனை அடையாளப்படுத்தும் கலாச்சாரம் கூட அழகற்றது தான்.. நல்லபடத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கே நான் நன்றி சொல்வேன்.. ‘என்று சேரன் தனது வாழ்த்து செய்தியில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here