எல்ல, ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் கடை ஒன்று நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தமை மற்றும் காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியமை தொடர்பில் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதுளை மாவட்ட புலனாய்வு அதிகாரிகள் சோதனை ஒன்றை மேற்கொண்டனர்.
அங்கு குறித்த நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை 120 ரூபாய் ஆக உள்ள 1 லீற்றர் குடிநீர் போத்தலை 200 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
அதேபோல் காலாவதியான 400 மில்லிலீற்றர் குளிர்ப்பான போத்தல்கள் 06 ஏனைய பொருட்களுடன் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கு தொடர்பில், குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து நீதவான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.








