தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் தலா இரண்டு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த வான் கதவுகள் ஊடாக வினாடிக்கு 5,600 கன அடி நீர் திறந்து விடப்படுவதாக நீர்ப்பாசன பணிப்பாளர் (நீர் முகாமைத்துவம்) தெரிவித்தார்.
நீர்த்தேக்கத்தின் மேல் நீரேந்து பிரதேசங்களில் பெய்து வரும் மழை காரணமாக அடுத்த சில மணி நேரத்தில் திறக்கப்பட்டுள்ள வான் கதவுகளின் அளவை மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தெதுரு ஓயாவின் கீழ் பகுதிகளில் இரு கரைகளிலும் வாழும் அபாயகரமான மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.








