அமெரிக்காவில் Apple-ன் siri recordings விவகாரம் தற்போது முடிவுக்கு வருகிறது.

Apple நிறுவனம், தனது Siri செயலி பலரது அனுமதி இல்லாமல் உரையாடல்களை பதிவு செய்ததாக வழக்கில் சிக்கியுள்ளது.

இதற்காக $95 மில்லியன் அபராதமாக செலுத்த Apple ஒப்புக்கொண்டுள்ளது.

2014 முதல் 2024 வரை Siri செயலியை iPhone, iPad, Mac, Apple Watch, HomePod போன்ற சாதனங்களில் பயன்படுத்திய அமெரிக்க பயனாளர்கள் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

ஐ-போன்

தற்செயலாக Siri செயலி இயங்கிவிட்டு, தனியுரிமை உரையாடல்களை பதிவு செய்தது முக்கிய புகாராக உள்ளது.

யார் பெறலாம் இத்தொகையை கோரலாம்?

  • அமெரிக்காவில் வசிக்கும் Apple சாதனங்களை பயன்படுத்தியவர்கள்
  • Siri தானாக செயல்பட்டு உரையாடல் பதிவு செய்ததாக உறுதிமொழி வழங்கவேண்டும்
  • இந்த தொகையை பெற சாதனங்களுக்கு வாங்கிய ரசீது தேவையில்லை
  • சாதனத்திற்கு $20 வரை பெற முடியும்
  • கோரிக்கை செய்ய கடைசி நாள்: ஜூலை 2, 2025

Apple தனது செயல்களில் தவறு ஏதும் செய்ததில்லை என்று தெரிவித்தாலும், நீண்டகால சட்டப்போராட்டத்தை தவிர்ப்பதற்காகவே இந்த சமரசம் செய்யப்படுவதாகவும், இது குற்ற ஒப்புதல் அல்ல என்றும் வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here