அமெரிக்காவும் ஈரானும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளன என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளதாக அல்ஜஷீரா செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் பேச்சுவார்த்தைக்கான திகதி மற்றும் நேரம் குறித்து தகவல் வெளியாகவில்லை என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு வார கால போர் நிறுத்தத்தில் லெபனானும் தொடர்ந்து ஒரு அங்கமாக உள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
“அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு லெபனானில் அமைதி நிலவுவது அவசியம்,” என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








