அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு தகுதிபெற்றும் இதுவரை வங்கிக் கணக்கு திறக்காத பயனாளிகள் தொடர்பாக, நலன்புரி நன்மைகள் சபை புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், அந்தப் பயனாளிகளின் பெயர் பட்டியல் பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், வங்கிக் கணக்கைத் திறப்பதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை தங்கள் பிரதேச செயலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தை, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி அல்லது பிரதேச அபிவிருத்தி வங்கிகளில் எதிலாவது சமர்ப்பித்து, அஸ்வெசும பயனாளி வங்கிக் கணக்கொன்றைத் திறக்கலாம் என்று அறிவிப்பு தெரிவிக்கிறது.
மேலும், இதுவரை கணக்கைத் திறக்காதவர்கள் விரைவில் வங்கிக் கணக்கு விபரங்களை பிரதேச செயலகங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் நலன்புரி நன்மைகள் சபை வலியுறுத்தியுள்ளது.








