சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு எதிராக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பிக்க, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் உயர்பதவியில் பணியாற்றும் அந்த அதிகாரி,
உயர் நிலைப் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பான ரகசிய தகவல்களை சமூக ஊடகங்களுக்கு கசியவிட்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவரை இடமாற்றம் செய்து ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு ஐ.ஜி.பி மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், குருநாகலைச் சேர்ந்த ஒரு சமூக ஊடக செயற்பாட்டாளருடன் இணைந்து,
ஐ.ஜி.பி மற்றும் தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் குறித்து
போலியான ஒலிப்பதிவு ஒன்றை உருவாக்கியதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடமிருந்தும், குறித்த ஒலிப்பதிவில் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாகக் கூறப்படும் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஊடக செயற்பாட்டாளரிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
அடுத்த கட்டமாக, குறித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடமிருந்து வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.








